ஜனாதிபதியை ஆதரித்து புசல்லாவை பகுதியில் கூட்டு பிரச்சாரம்!
சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து கண்டி மாவட்டத்தில் புசல்லாவை உள்ளிட்ட தோட்ட பகுதிகளில் இன்று தீவிர பிரச்சாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதொகாவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, கம்பளை நகரசபையின் முன்னாள் தலைவர் சமந்த உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் குறித்த பிரச்சார நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
நியூபிகொக், நயப்பனை மற்றும் செல்வக்கந்த ஆகிய தோட்டங்களை உள்ளடக்கிய கூட்டம் சப்ளி பகுதியிலும், சோகம, மெல்போர்ட், பிளக்போரஸ்ட், போமன் உள்ளிட்ட தோட்டங்களை உள்ளடக்கிய கூட்டம் நியூ மெல்போர்ட்டிலும், ஸ்டெலன்பர்க், புபுரஸ்ஸ, வீடன் உள்ளிட்ட தோட்டங்களை உள்ளடக்கிய கூட்டம் டெல்டா தோட்டத்திலும் நடைபெறவுள்ளது.