ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெறுவதற்குரிய சாத்தியம் குறைவு என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
“அநுரகுமாரதிஸாநாயக்கவின் வாக்குவங்கி கடந்த முறையைவிட அதிகரிக்கும். அவர் சவால்மிக்க வேட்பாளராக இருப்பார், ஆனால் வெற்றிபெறுவதற்குரிய சாத்தியம்.” – இல்லை எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.
அதேவேளை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் அவருக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில்தான் போட்டி நிலவும் எனவும் சூரியன் வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் அரசியல் விவாத நிகழ்ச்சியின்போது ஜீவன் சுட்டிக்காட்டினார்.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள் எனக் கூறுபவர்கள் அதற்கான உரிய பொறிமுறையை முன்வைக்க வேண்டும் எனவும் ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.
