ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி வேட்பாளராக சிறிதுங்க ஜயசூரியவை களமிறக்குவதற்கு ஐக்கிய சோசலிசக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய சோசலிசக் கட்சியின் மத்திய குழு கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை சிறிதுங்க ஜயசூரிய உதயனிடம் உறுதிப்படுத்தினார்.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமா என்ற அச்சம் இன்னும் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிட்டியுள்ள நிலையில், எதற்காக மாத இறுதிவரை காத்திருக்க வேண்டும். சிலவேளை தேர்தலை பிற்போடுவதற்கு அரசுக்கு இடமளித்து அரசியல் சூழ்ச்சிக்கு தேர்தல் ஆணைக்குழுவும் துணை நிற்கின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.” – எனவும் சிறிதுங்க ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
