அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயார் எனவும், வெற்றி வேட்பாளர் களமிறக்கப்படுவார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு பலத்த கேள்வி உள்ளது. அரசியல்வாதிகள், முயற்சியாளர்கள் ,தொழில் அதிபர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் என பலரும் உள்ளனர். நாட்டுக்கு பொருத்தமான, பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வெற்றி வேட்பாளரை நாம் களமிறங்குவோம்.
அடுத்த ஜனாதிபதி தேர்தல்வரைதான் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கப்படுகின்றது. தனி நபர்களுடன் அல்லாமல் கட்சி என்ற ரீதியிலேயே பேச்சு நடத்தப்படும். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதா இல்லையா என்பதை கட்சிதான் தீர்மானிக்கும்.” – என்றார்.