ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார், தோல்வி என தெரிந்தால் அதில் போட்டியிடாமல் இருக்கும் முடிவை 2005 ஆம் ஆண்டிலேயே அவர் எடுத்துவிட்டார். தற்போது ஆய்வு நடத்துகின்றார். அதில் தோல்வி என தெரிந்தால் போட்டியிடமாட்டார். 2020 பொதுத்தேர்தலில் அவர் களமிறங்கும் முடிவில் இருக்கவில்லை. ஆனால் கொழும்பில் ஒரு ஆசனம் ஐ.தே.கவுக்கு கிடைக்கும் என நாம்கூட நம்பினோம்.
ஆக ரணில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மொட்டு கட்சி வாய்ப்பு வழங்கினால்கூட அவர் வரமாட்டார். போட்டியிடப்போவதில்லை என்பதை முன்கூட்டியே அறிவித்துவிட்டால் ஜனாதிபதியின் உத்தரவுகளை சிலர் ஏற்காமல் இருக்ககூடும். அதனால்தான் கடைசிவரை மௌனம் காப்பார்.” – என்றார்.