ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை அமைச்சரவை கூடியபோது ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுமாறு அமைச்சர்களுக்கு அவர் அறிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர் தல் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு மாத்திரமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
