ஜனாதிபதி தேர்தல்: அச்சுப்பணிகளுக்கு ரூ. 800 மில்லியன் செலவாகும்

ஜனாதிபதித் தேர்தல் அச்சுப்பணிகளுக்காக அதிகபட்சம் 600 முதல் 800 மில்லியன் ரூபா செலவாகுமென அரச அச்சகம் மதிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

வாக்குச்சீட்டின் அளவைப் பொறுத்து இந்த தொகையில் மாற்றம் ஏற்படலாமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பான பத்திரங்கள் அச்சிடப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles