” ஜனாதிபதி தேர்தல் குறித்து மொட்டு கட்சி இன்னும் முடிவில்லை”

அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை பொது வேட்பாளராக களமிறக்க வேண்டும் என எமது கட்சி உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டுவருகின்றனர். அது அவர்களின் தனிப்பட்ட கருத்தாகும்.

யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பது குறித்து கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை. கட்சி எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.” – எனவும் எஸ்.எம். குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles