ஜனாதிபதி பதவியை வகித்தவர்கள் மீண்டும் நாடாளுமன்றம் வருவதற்கு தடை விதிப்பதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
” ஜனாதிபதிமார் மீண்டும் நாடாளுமன்றம் வருவதை, சட்டம் இயற்றி தடை செய்ய வேண்டும். சிலவேளை ரணில் விக்கிரமசிங்க அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவாரா என தெரியவில்லை. ஜனாதிபதி பதவியை வகித்தவர்கள் மீண்டும் நாடாளுமன்றம் வருவது தவறான முன்னுதாரணமாகும்.
ஜே.ஆர். ஜயவர்தன, சந்திரிக்கா அம்மையார் போன்றோர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னர் நாடாளுமன்றம் வரவில்லை.” – எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
அதேவேளை, உணவை வீணடித்தால் தண்டனை விதிப்பதற்கான சட்டமும் கொண்டுவரப்பட வேண்டும். தமக்கு உண்ணக்கூடிய அளவுக்கு அதிகமாக பகிர்ந்து உணவை வீணடிப்பது ஏற்புடையது அல்ல. வெளிநாடுகளில் அவ்வாறு செய்தால் தண்டம் அறவிடப்படும்.” – எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.