ஜனாதிபதி ரணிலை நாம் பாதுகாப்போம் – மஹிந்தானந்த சூளுரை

” கோட்டாபய ராஜபக்சவுக்கு நடந்ததுபோல, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நடப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அவரை பாதுகாப்போம் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

” அடுத்த இரண்டரை வருடங்களுக்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது. அடுத்து வரும் மாதங்களில் பொருட்களின் விலைகள் குறையும். அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும்.

எதிரணிகள் மாறுபட்ட நிலைப்பாடுகளை கொண்டிருக்கலாம். ஆனாலும் ஒரு விடயத்தை தெளிவாக கூறிவைக்க விரும்புகின்றோம். அதாவது கோட்டாபய ராஜபக்சவுக்கு நடந்ததுபோல – அவருக்கு செய்ததுபோல, ரணில் விக்கிரமசிங்கவுக்கு செய்வதற்கு இடமளிக்கமாட்டோம்.” எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.

 

 

 

 

Related Articles

Latest Articles