எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஐதுரூஸ் இல்லியாஸ் நேற்று வியாழக்கிழமை காலமானார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினராகவும் கடமையாற்றிய ஐதுரூஸ் இல்யாஸ் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர். இறக்கும் போது 78 வயதுடையவராக இருந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வியாழக்கிழமை (22) இரவு மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்னாரின் ஜனாஸா இன்றுவெள்ளிக்கிழமை (23) புத்தளம் பகா முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
