ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் இவ்வாரம் நடைபெறவுள்ளது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஜனாதிபதி தேர்தலுக்கான மொட்டு கட்சி வேட்பாளர் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ எமது கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச மற்றும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் இவ்வாரத்துக்குள்கூடி இது பற்றி ஆராய்வார்கள். இக்கூட்டத்தின் பிரகாரம் எமது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். சவாலை ஏற்கக்கூடிய, வெற்றிவேட்பாளர் ஒருவரை நிறுத்துவோம்.” – என்றார்.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பதற்கு நாம் தயாரில்லை எனவும் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
