ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
யாழ். நகர் செல்லும் அவர், பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் கடந்த 33 வருடங்களாக காணப்பட்ட 278 ஏக்கர் விவசாய காணிகளை உரிமையாளர்களிடம் மீள கையளிக்கவுள்ளார்.
பலாலியில் நடைபெறும் நிகழ்விலேயே காணி கையளிப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அரச காணிகளில் குடியிருப்போருக்கான காணி உறுதியையும் வழங்கிவைக்கவுள்ளார்.
