லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கண்டி டஸ்கர்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
கண்டி டஸ்கர்ஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ் ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா அணி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.
இதன்படி களமிறங்கிய அவ்வணி 20 ஒவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது. சொயிப் மலிக் 59 ஓட்டங்களையும், பானுக்க 21 ஓட்டங்களையும், அசலங்க 18 ஓட்டங்களையும் பெற்றனர். பிரதீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 151 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 151 ஓட்டங்களைப்பெற்று வெற்றிபெற்றது.
கண்டி அணி சார்பாக அசேல குணரத்ன 52 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 42 ஓட்டங்களையும் பெற்றனர்.ஆட்டம் இலக்காமல் 52 ஓட்டங்களைப்பெற்ற அசேல குணரத்ன ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.