ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றிநடை!

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர்பில் நேற்று நடைபெற்ற 2ஆவது ஆட்டத்தில் காலி கிளேடியட்டர்ஸ் அணியை, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி தோற்கடித்தது.

ஹம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற காலி அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தார்.

இதன்படி, துடுப்பெடுத்தாட களமிறங்கிய காலி அணியின் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தனர். இறுதி நேரத்தில் அப்ரிடி அதிரடி காட்டினார். அவர் 23 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பெற்றார். ஒரு ஓவரில் நான்கு சிக்ஸர்களை விளாசி வாண வெடிக்கையும் காட்டினார்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் காலி அணி 8 விக்கட்டுக்களை
இழந்து 175 ஓட்டங்களை குவித்தது.

பின்னர் 176 என்ற வெற்றியிலக்கை நோக்கு துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. பெர்ணான்டோ 92 ஓட்டங்களைப் பெற்றார். ஆட்ட நாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

Related Articles

Latest Articles