ஜப்பான்: 59 வயதான சீன ஆராய்ச்சியாளர் மீது தரவு கசிவு குற்றச்சாட்டு

ஜப்பானின் தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தின் சீன ஆராய்ச்சியாளர், ஒரு சீன நிறுவனத்திற்கு தரவுகளை கசியவிட்டதாக டோக்கியோவிலுள்ள வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளதாக கியோடோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

59 வயதான குவான் ஹெங்டாவோ, நியாயமற்ற போட்டியைத் தடுக்கும் சட்டத்தை மீறிய சந்தேகத்தின் பேரில் ஜூன் மாதம் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் தேசிய மேம்பட்ட தொழில்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தால் இம்மாத தொடக்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

கியோடோ நியூஸ் (Kyodo News) என்பது டோக்கியோவின் மினாடோவில் உள்ள ஒரு செய்தி நிறுவனமாகும்.

எழுத்துப்பூர்வ குற்றச்சாட்டு மற்றும் பிற ஆதாரங்களின்படி, ஏப்ரல் 2018 இல் பெய்ஜிங்கில் உள்ள ஒரு இரசாயன தயாரிப்பு உற்பத்தி நிறுவனத்திற்கு fluorine கலவை பற்றிய தரவுகளுடன் கூடிய மின்னஞ்சலை குவான் அனுப்பியதாக கூறப்படுகிறது. இபராக்கி மாகாணத்தில் உள்ள நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களை அதன்போது அவர் அணுகியுள்ளார்.

Fluorine கலவைகள் மின்மாற்றிகள் போன்ற மின் சாதனங்களில் இன்சுலேட்டராகவும், இன்சுலேடிங் வாயுவாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

2002 இல், குவான் ஜப்பானிய நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டார். புலனாய்வு ஆதாரங்கள் மற்றும் சீன வலைத்தளங்களின்படி, அவர் சீனாவின் இராணுவத்துடன் தொடர்புடைய பெய்ஜிங் தொழில்நுட்ப நிறுவனத்திலும் கற்பித்தார் என்று கியோடோ நியூஸ் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles