இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து ஜி 7 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது என நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக அயல்நாடான ஆப்கானிஸ்தானிற்கு மனிதாபிமான உதவியாக கோதுமையை அனுப்பிவைத்துள்ளோம். எங்கள் அயல்நாட்டின் உணவுபாதுகாப்பை உறுதிசெய்வதற்காக உதவி வருகின்றோம். – என அவர் தெரிவித்துள்ளார்.
