ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளை 8 ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில், அவ்விவகாரம் இலங்கை நாடாளுமன்றத்திலும் பேசுபொருளாக மாறக்கூடிய சூழ்நிலை உள்ளது.
செப்டம்பர் மாதத்துக்குரிய முதல்வார நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 9 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
இதன்போது இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை மற்றும் புதிதாக முன்வைக்கப்படவுள்ள தீர்மானங்கள் பற்றி ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் கருத்துகளை முன்வைக்கவுள்ளனர் என தெரியவருகின்றது.
ஜெனிவா விவகாரம் தொடர்பல் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு பற்றி எதிரணி உறுப்பினர்கள் கேள்விக்கிணைகளைத் தொடுக்கவுள்ளனர் என்று அறியமுடிகின்றது.
அத்துடன், தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனித உரிமை நிலைவரங்கள் பற்றி உரையாற்றவுள்ளனர்.
அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவ கார அமைச்சர் விஜித ஹேரத் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜெனிவா
வுக்கு பயணமானார்.
அமைச்சருடன் ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தயானி மெண்டிசும் சென்றுள்ளார்.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவை யின் 60ஆவது கூட்டத் தொடர் நாளை மதியம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உரையாற்றுவார் என்று தெரியவருகின்றது.
000000000000000000000000000
“ ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை ஏற்க முடியாது. ஆணையாளரின் இறுதி அறிக்கை துல்லியமாகவும் சமநிலையுடனும் அமைய வேண்டும்.” –
இவ்வாறு ஜெனிவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதி நிதி பணிமனை தெரிவித்துள்ளது.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவை யின் 60ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாள ரின் அறிக்கை தொடர்பிலேயே ஜெனிவா விலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பணிமனை மேற்கண்டவாறு கூறியுள்ளது.
“ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யின் 57{1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தத் தீர்மானத்தின் கீழ் செயற்படுத் தப்படும் பொறுப்புக்கூறல் திட்டத்தை நாம் தொடர்ந்து எதிர்க்கின்றோம். இதுபோன்ற வெளிப்புறத் திட்டங்கள் உள்நாட்டு நல் லிணக்க முயற்சிகளுக்குத் தீங்கு விளை விக்கும். ஐ.நா. மனித உரிமைகள் ஆணை யாளர் அலுவலகத்துடனும் அதன் நிரந் தர மனித உரிமைகள் பொறிமுறை களுடனும் இலங்கை நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணி வருகின்றது. இதனால், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் இறுதி அறிக்கை துல்லியமாகவும் சமநிலை யுடனும் அமைய வேண்டும்.” – என்றும் ஜெனிவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பணிமனை குறிப்பிட் டுள்ளது.
அத்துடன், நாட்டின் மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்த இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், தீர்க் கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித் தும் அந்த அறிக்கை விவரித்துள்ளது. முன்னதாக, இராணுவம் மற்றும் படை யினரின் மோசமான மனித உரிமைகள் மீறலை இலங்கை அரசு ஒப்புக்கொள்ளத் தவறிவிட்டது.
இலங்கை ரோம் சட்டத் தில் கையெழுத்திட வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாள ரின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.