” யானை – புலி ஒப்பந்தத்தை தோற்கடித்து நாட்டை மீட்பதற்காக 2005 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி வைத்த ஜே.வி.பி, தற்போது ஜெனிவா பொறிமுறைக்கு அடிபணிந்துவிடக்கூடாது.”
இவ்வாறு ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவரான ரோஹன விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஜெனிவாவில் படையினரை வேட்டையாடுவதற்கு சூழ்ச்சி நடக்கின்றது. இது பிரிவினைவாத குழுக்களின் தேவைப்பாடாகும். இதற்காக ஜெனிவா மரணப்பொறி வகுக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை நாட்டு மக்கள் நிராகரித்துள்ளனர்.
எனவே, இந்த அரசாங்கம் ஜெனிவாப் பொறிக்குள் சிக்கிவிடக்கூடாது என ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரிடம் கோருகின்றோம். இதனை வலியுறுத்தியே மக்கள் மகஜரில் கையொப்பம் திரட்டுகின்றோம்.
யானை, புலி ஒப்பந்தத்தை தோற்கடிப்பதற்காக முன்னின்று செயற்பட்ட ஜே.வி.பி, ஜெனிவா பொறிமுறைக்கு அடிபணிந்து படையினரை வேட்டையாட இடமளிக்க கூடாது. எமது மக்கள் மகஜர் செப்டம்பர் 04 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சரிடம் கையளிக்கப்படும்.”- என்றார்.