ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

2012ஆம் ஆண்டு சதொச நிறுவன ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்கிற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இன்று(30) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளை 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்க கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே இன்று(30) உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அந்நிறுவனத்தின் முன்னாள் பபணிப்பாளர் காஜா மொஹிதீன் மொஹமட் ஷாகீர் ஆகியோருக்கு எதிராகவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய பிரதிவாதிகள் இன்று(30) நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Related Articles

Latest Articles