” எமது அணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்காக அரசியல் நடத்துவது கிடையாது. கொள்கை அரசியலையே முன்னெடுக்கின்றோம்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
” பதவிகளை விட்டுவிட்டே மொட்டு கட்சியில் இருந்து நாம் வெளியேறினோம். பேராசிரியர் ஜி.எல்.பீரிசுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பின்போது டலஸின் பெயரை அவர் முன்மொழியாமல் இருந்திருந்தால் தற்போது பீரிஸ்தான் பிரதமர்.” – எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.










