நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, சரித ஹேரத் ஆகியோர் விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைவார்கள் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளன எனவும், விரைவில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரொஷான் ரணசிங்க, தயாசிறி ஜயசேகர ஆகியோரும் சஜித் கூட்டணியில் இணைவதற்கு திட்டமிட்டுள்ளனர்.