நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை தனிமைப்படுத்தவில்லை, அவரும் விரைவில் எமது கூட்டணியில் இணைவார் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய கருத்து கணிப்பில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே முன்னிலையில் உள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, சுதந்திரசபை என்பவத்தில் இருந்து உறுப்பினர்கள் எம்முடன் நேரடியாக இணையவுள்ளனர். அடுத்துவரும் நாட்களில் இதற்கான நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள ஊழல் மோசடியுடன் தொடர்புபடாதவர்களும் வரலாம். எந்தவொரு உறுப்பினரையும் நாம் பேரம் பேசி விலைக்கு வாங்குவதில்லை. கொள்கை அடிப்படையிலான பயணமே தொடர்கன்றது.” – என்றார்.
