Update
டான் பிரியசாத் உயிரிழக்கவில்லை….!
டான் பிரியசாத் உயிரிழக்கவில்லை எனவும், அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றார் எனவும் கொழும்பு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசியல் செயற்பாட்டாளர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட டான் பிரியசாத்மீது இன்று இரவு 9 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்தே இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் வெளியாகின. அதன்பின்னர் அவர் உயிரிழந்துவிட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையிலேயே டான் பிரியசாத் உயிரிழக்கவில்லை எனவும், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார் எனக் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
நபரொருவருடன் மது அருந்திகொண்டிருந்தவேளையிலேயே, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. மற்றைய நபருக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.
………………
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட டான் பிரியசாத், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என தெரியவருகின்றது.
அரசியல் செயற்பாட்டாளர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட டான் பிரியசாத்மீது இன்று இரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, மீதொட்டமுல்லையில் உள்ள ‘லக்சந்த செவன’ அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே அவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
விருந்துபசாரத்தில் பங்கேற்றிருந்தபோது, அங்கு வந்திருந்த நபரொருவராலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.