டான் பிரியசாத் சுட்டுக்கொலை: விசாரணை வேட்டை தீவிரம்!
ராஜபக்ச அணி சார்பு அரசியல் செயற்பாட்டாளர் டான் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்தே டான் பிரியசாத்மீது நேற்றிரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
நபரொருவருடன் அவ்வேளையில் அவர் மது அருந்திக்கொண்டிருந்தார் எனத் தெரியவருகின்றது. அவருடன் இருந்த மற்றைய நபருக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்தவிட்டு தப்பிச்சென்றுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
இதில் படுகாயமடைந்த டான் பிரியசாத் கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியானது. பின்னர் அவர் உயிரிழந்துவிட்டார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. அதன்பிறகு அந்த தகவல் மறுக்கப்பட்டது. டான் பிரியசாத் உயிரிழக்கவில்லை, அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார் எனக் கூறப்பட்டது.
எனினும், அவர் நேற்றிரவு உயிரிழந்துவிட்டார்.
கடும் போக்குடைய சிங்கள தேசியவாத அணியை சேர்ந்த டான் பிரியசாத், மே – 9 மக்கள் புரட்சியின்போது, போராட்டக்காரர்களின் தாக்குதலுக்கு இலக்கானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மே – 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சிசபைத் தேர்தலில், கொலன்னாவ நகர சபைக்காக மொட்டு கட்சி சார்பில் டான் பிரியசாத் போட்டியிடுகின்றார் என தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.