டெங்கு காய்ச்சலால் 31 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கடந்த இரு நாட்களில் மட்டும் 439 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இந்த ஆண்டில் 49,759 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அவர்களில் 24,837 பேர் மேல்மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை 61 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் அதிக டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles