எதிர்வரும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் என்று இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் உபுல் தரங்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அத்துடன், ஒரு நாள் கிரிக்கெட் அணி தலைவரான குசல் மெண்டிஸ் டெஸ்ட் அணியின் உப தலைவராக செயற்படுவார் எனவும் உபுல் தரங்க குறிப்பிட்டார்.