தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு!

நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டமை அடுத்து இவ்வாறு இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் ஒரு பவுன் தங்கம் 5,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 22 கரட் தங்கத்தின் வலை 1,12,500ஆக காணப்படுகின்ற அதேவேளை, 24 கரட் தங்கத்தின் விலை 121,500 ஆக காணப்படுகின்றது.

மேலும், உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,818 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles