கொரோனா தடுப்பூசிகளைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்று நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றமையை அடுத்து நாட்டில்தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதன்ஊடாகவே கொரோனாவில் இருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
மலையக தோட்டப் பகுதிகளில் தடுப்பூசிகளை மக்கள் பெற்றுக் கொள்வதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகும். நாம் ஏற்றுக் கொள்ளும் தடுப்பூசிகளின் பெயர்களில் மாத்திரமே வேறுபாடு உள்ளன.ஆனால் நோக்கம் ஒன்றாகவே உள்ளது.இவ்வாறானதொரு நிலையில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து தொழில் செய்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் சுகாதார தரப்பினர் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் மலைப்பகுதிகளில் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாதவர்களின் விவரங்களை தோட்ட நிர்வாகத்தினரும் இளைஞர் யுவதிகளும் ஏனைவர்களும் சுகாதார தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும்.
தடுப்பூசி வழங்கும் மத்திய நிலையங்களில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் சுகாதார தரப்பினருக்கு மலையக இளைஞர் யுவதிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும் கொரோனா தொடர்பில் நாம் எப்போதும் விழிப்புடன் செயற்பட்டு
எமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
