தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் நான்கு மாத சிசு வைத்தியசாலையில் உயிரிழப்பு

தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்ததாக கூறப்பட்ட நான்கு மாதங்களேயான பெண் சிசு, நேற்று (16) உயிரிழந்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மேல் கொமுகொமுவ பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.ஏ. எஸ்.நிம்னாதி திஸாநாயக்க என்ற சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். .

நான்கு மாதங்களில் வழங்கப்படவேண்டிய தடுப்பூசி    கடந்த 15ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மறுநாள் 16ஆம் திகதி சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாக சிசுவின் தந்தை தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிசுவின்  மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles