கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட மினுவாங்கொடை , கமன்கெதர பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
51 வயதான தந்தையும், 23 மற்றும் 24 வயதுகளுடைய இரு மகன்களுமே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்த இனந்தெரியாத குழுவினர், வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
உயிரிழந்த மூவரும், கொலை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியிலில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலம் நிலவி வந்த முரண்பாடு காரணமாக குறித்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.










