தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு, தந்தையொருவர் தற்கொலைக்கு முயற்சித்த கொடூர சம்பவமொன்று அம்பாறை, பெரிய நீலாவணை பகுதியில் இன்று நடைபெற்றது.
முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ் (வயது-29), முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா(வயது-15) ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தனது இரு பிள்ளைகளையும் கழுத்தை வெட்டி கொலை செய்த பின்னர், தந்தையும் தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த நிலையில், கல்முனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
63 வயதான தந்தையே வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.
வெட்டி கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளும் மன வளர்ச்சி குன்றியவர்கள் என தெரிய வருகின்றது. குறித்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்ததாக மேலதிக விசாரணைகளில் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.