தனிமைப்படுத்தப்பட்ட சனம் ஷெட்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சனம் ஷெட்டி தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில் கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டார். ரசிகர்களின் ஆதரவு இருந்தும் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், சனம் ஷெட்டி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சனம் ஷெட்டி, இன்னும் தனது சொந்த வீட்டிற்கு செல்லவில்லையாம். அவர் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆதலால், யாரும் எதிர்பாராத வகையில் சனம் ஷெட்டி விரைவில் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சீசனில் வனிதா வெளியேற்றப்பட்ட ஒரு சில தினங்களில் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார். அந்த வகையில் தற்போது சனம் ஷெட்டியும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Related Articles

Latest Articles