தனிவழி செல்ல தயாராகும் பொன்சேகா?

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் ரீதியில் முடிவொன்றை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ எனது பார்வையில் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதனையே விரும்புவார்கள். நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்திவிட்டு ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் உறுப்பினர்களின் ஆதரவை பெறமுடியாமல்போகும்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே நான் அரசியல் ரீதியில் முடிவை எடுப்பேன். அப்போது களநிலைவரம் என்னவென்று தெரியவரும். கடந்தமுறைகூட கட்சி அழுத்தத்தால் ரணில் பின்வாங்கி, சஜித் களமிறக்கப்பட்டார். எது எப்படி இருந்தாலும் கள நிலைவரத்துக்கேற்ப வெற்றி வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அந்த வேட்பாளருக்கு நான் அதரவு வழங்கமாட்டேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles