தபால்மூல வாக்களிப்பு: இன்று இறுதி நாள்!

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்குகளை இதுவரை செலுத்தாத வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்காக வழங்கப்பட்ட சந்தர்ப்பம் இன்றுடன் நிறைவடைகின்றது.

இன்று(12) காலை 8.30 முதல் பிற்பகல் 4.30 வரை தத்தமது மாவட்ட செயலக அலுவலகத்தில் தபால் மூல வாக்குகளை செலுத்த முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்ற வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக இதற்கு முன்னர் கடந்த 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கு 736,589 அரச உத்தியோகத்தர்கள் தகுதி பெற்றிருந்தனர்.

இதனிடையே தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கையினால் இன்றும் மாவட்ட செயலகங்களை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles