தப்பியோடிய கைதிகளுள் 258 பேர் கைது! தேடுதல் வேட்டை தொடர்கிறது!!

பொலன்னறுவை, வெலிகந்த, கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தப்பிச்சென்ற கைதிகளில் 258 பேர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர்.

தப்பிச்சென்ற ஏனைய கைதிகளை, கைது செய்வதற்கான நடவடிக்கை தொடர்கின்றது.

அத்துடன், கைதிகள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குமாறு மக்கள் கோரப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை – வெலிகந்த, கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கைதிகள் இன்று தப்பியோடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles