01. எழுத்து, கவிதை, இலக்கியம், இதில் எதில்உங்களுக்கு ஆர்வம் ?
கூடவே ஓவியம் மற்றும் புகைப்படத்துறையினையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மீட்குறப்பிட்ட அத்தனையும் ஒரு சினிமா இயக்குநர் கொண்டிருக்கவேண்டிய அறிவு கூறுகளாகளாகவே பார்க்க பபாவேண்டும். ஆதலால் அதில் சிறுக சிறுக பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கின்றேன்.
02. இயக்குனராக இருக்கும் நீங்கள் இதுவரைவெளியிட்டத்தில் நீங்கள் தனித்துவமாக கருதுவது?
ஐந்து குறும்படங்களும் பிடிக்கும். ஸ்பெஷலாக ஹீப்ரு லிலித்தை பிடிக்கும்.
ஒரு படைப்பை படைப்பாளி கொண்டாடுவதற்கும் பொதுஜனம் கொண்டாடுவதற்கும் இருக்கும் வித்தியாசத்தை அடையாளப்படுத்திய படம்.
03. தென்னிந்தியா இயக்குனர்களுடன் உதவிஇயக்குனராக இருக்கின்ற நீங்கள் அதன் அனுபவம்எத்தகையது ?
அது சவால் மிக்கது.
ஒற்றை கதிரைக்கு ஆயிரம் பேர் வரிசையில் நிற்கும் இடத்தில் அதை அடைவதென்பது தியாகத்தின் அடிப்படையில் நிகழகூடியது. இரண்டு நாட்கள் ஆறு டீயில் கூட சமாளிக்க வேண்டிய நிலைகூட வந்தது.
04. மலையகத்தை பிறப்பிடமாக வாழ்விடமாக கொண்டநீங்கள் உங்கள் இயக்கத்திற்கு கருப்பொருளாகஎவ்வாறான விடயங்களை எடுத்துக்கொள்வீர்கள் ?
இதற்கான பதிலை சுருக்கமாக சொல்ல முடியாது ஜீவா.
இங்கு வரும் நூற்றில் என்பது விழுக்காடு குறும்படங்கள் அம்மா வெளியூர் செல்கிறாள். தந்தையால் மகள் கற்பமாகிறாள் என்பதை அடிப்படையாகவே இருக்கிறது.
புள்ளிவிபரப்படி இப்பிரச்சினையில் மலையகம் எட்டாவது இடத்தை பெறுகிறது. ஆக முதலாவது இடத்தை பெரும் பிரதேசத்திலிருந்து இப்படியான படங்கள் வெளிவருவதே இல்லை.
இதன் மூலம் ஒரு சமூகத்தின் அடையாளமாக இப்பிரச்சினை மாறிவிடுகிறது இல்லையா?
ஒரு கலைஞன் ஒரு சமூகத்தின் கௌரவத்தையும், யதார்த்தையும் வெளிப்படையாக தோளில் சும்மாப்பவனாக இருக்க வேண்டும்.
அல்லது அபடைப்பு பொது பிரச்சினையை பேசுவதாக இருக்கவேண்டும்.
என் கருப்பொருள் அத்தனையும் உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நபருக்கும் பொருந்துவதாக இருக்கவேண்டுமென்பத்தில் கவனம் செலுத்துகிறேன்.
05. மலையகத்தில் பெருமளவான குறும்படஇயக்குனர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்குஉங்களது வழிகாட்டல் எத்தகையது ?
எனகிருக்கும் சவாலே அவர்களுக்கும் இருக்கலாம்.
இப்படியான சூழ்நிலையில் நமக்கான ஒரு சினிமா தளத்தை நாமே உருவாக்கி கொள்ளவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றோம்.
அது சம்பந்தமாக முற்றும் இலவசமான ஒரு நூலகம் மற்றும் அமைத்து சினிமாசாதனகங்ளை கொண்ட ஒரு ஸ்டுடியோவையும் உருவாக்குவதே ஒரு கலைஞனாக நான் செய்துவைக்கவேண்டிய கடமை ஒன்றிருப்பதாக உணர்கிறேன்.
அது சம்பந்தமான வேலை திட்டத்தில் இறங்கியுள்ளேன்.
06. லிங் சின்னா இது உங்களது இயற் பெயரா?
இல்லை இது ஒரு குழந்தை வைத்த பெயர். அப்போது அக்குழந்தைக்கு மூன்று வயதிருக்கும். பலா கட்டையை பலாதட்ட என்பான்.
கோப்பியை பொப்பி என்பான். அவன் சுடுதன்னி என்று உச்சரிப்பதை பத்திரிக்கையில் பதிவிடக்கூட முடியாது.
அவனுக்கு நான் சின்ன அண்ணா, அதை சின்னா என்று உச்சரிப்பான். அப்பாவின் முதல் இரண்டு எழுத்தை சேர்த்து லிங். சின்னாவாக மாறிவிட்டேன்.
07. கொரோனா காலத்தில் திரைப்பட இயக்கசெயற்பாடுகள் எத்தகையது?
அது சோற்றுக்கே லாற்றியான காலம் அது. சரியென்றால் மாமிசபச்சினியை ஆரம்பித்திருக்க கூடாது. இபோதுவரை நிற்கிறது.
08. லிங் சின்னா இந்த திரைக்கலைக்குள் பிரவேசம் ,ஆர்வம் எவ்வாறு ஏற்ட்டதென பகிர்ந்து கொள்வீர்களா?
அப்பா ஆரம்பகால மலையக திரைப்படத்தில் உதவி இயக்குநர், இரண்டு மூன்று சிங்கள படத்தில் ஜுனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்திருக்கிறார். அதே ரத்தம் அப்டித்தானிருக்கும் போல..!
09. தென்னிந்தியாவில் இயக்குனர் ஆகவேண்டும்என்று இலங்கையிலிருந்து சென்றவர்களின் நிலைஎத்தகையது சென்றவர்கள் இலக்கை அடைய கூடியதாகஇருந்ததா?
பெரும்பாலும் இல்லை. ஆசான் பாலு மகேந்திராவிற்கு பிறகு பெரிதாக யாரும் பிரகாசிக்வில்லை.
மாரிமகேந்திரன் சென்னையிலிருந்து வந்ததன் பின்னர் சினிமா புத்தகம் எழுதுகிறார்.
லோஸ்லியா,தர்ஷன் போன்றவர்கள் பிரதான பாத்திரம் ஏற்றிருக்கிறார். சிந்தர், பிரானா போன்றவர்கள் சிறு சிறு பாத்திரமேற்று நடிக்கிறார்கள்.
கோவர்த்தனன் ஷங்கரின் உதவி இயக்குனராக இருக்கிறார்.
மிஷ்கினின் புதிய திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் இலங்கைதான்.
இயக்குநர் தவாஜி இந்தியாவில் இருந்து வந்ததன் பின்னர் இலங்கையில் ஆட்டம் ஆரம்பம் என்றொரு முழு நீளத்திடைப்படத்தை எடுத்து முடித்து வெளியீட்டுக்கு தயாராகி கொண்டிருக்கிறார்.
10. மலையக கலைஞர்களுக்காக ஸ்டூடியோ மற்றும்கமரா போன்ற ஒளிப்பதிவு உபகரணங்களை மலையககலைஞர்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன்கலந்துரையாடியுள்ளீர்கள். இது பற்றி எம்முடன் பகிர்ந்தக்கொள்ள முடியுமா?
ஆமாம் ஜீவா, அமைச்சர் ஜீவன் கொழுந்துக்கு அப்பால் இளைஞர்களின் துறையில் கலை இருக்கிறதா என்று கவனம் செலுத்தினார்.
கலைஞர் என்றொரு இனம் இருப்பதை நாங்கள் அறிமுகப்படுத்தி எங்களுக்கான வளத்தை ஏற்படுத்தித்தருமாறு கோரிக்கை விடுத்தோம்.
அதன் மூலம் ஒரு ஸ்டுடியோ உருவாக்குவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கின்றோம். வேலை திட்டங்கள் நடந்துகொண்டிருக்கிறன.
- நன்றி தமிழன்