தமிழரசுக் கட்சியினருடன் ஜனாதிபதி இவ்வாரம் சந்திப்பு

“இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இந்த வாரம் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்படும். இதன்போது மாகாண சபை முறைமை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அரசின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளலாம்.”

– இவ்வாறு சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினைக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கப் போவதாக ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் நேற்று நாடாளுமன்ற அமர்வின்போது கேள்வி எழுப்பப்பட்டது. தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இது தொடர்பில் அரசின் நிலைப்பாட்டை வினவினார்.

ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கப் போவதாக ஊடகங்களுக்குக் குறிப்பிட்டிருந்த விடயத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருத வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தில் அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது குறுக்கிட்ட சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, இராசமாணிக்கம் சாணக்கியன் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பதாகவும், ஏனையோர் சொல்வதைக் கேட்டு முறையற்ற சந்தேகங்களை எழுப்ப வேண்டாம் என்றும் கோரினார்.

அதேநேரம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் இது விடயமாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடல் ஒன்று நடத்த அழைப்பு விடுத்திருப்பதாகத் தெரிவித்த பிமல் ரத்நாயக்க, ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா அன்றி ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு ஒழுங்குபடுத்துவதாகவும், இந்த விடயம் குறித்து பேச்சு நடத்தலாம் என்றும் குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles