பிளவுபட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீள ஒன்றிணைப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன், தமிழரசின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள சிறிதரனுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
“ தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவியை வைத்துக்கொண்டு, பிளவுபட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒன்றிணைத்து, தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சியில் அவர் இறங்க வேண்டும்.” – எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் யுக்திய நடவடிக்கை குறித்தும் ராதாகிருஷ்ணன் கடும் விமர்சனங்களை முன்வைத்தார், மக்களை சுட்டுக்கொல்வதுதான் யுக்தியா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
