தமிழரசுக் கட்சியை சிதைக்க சதி!

“நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சிதைக்கச் சிலர் சதித்திட்டம் தீட்டுகின்றனர். பதவி ஆசையில் அவர்கள் இந்தச் சதி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த சதித்திட்டம் வெற்றியளிக்க இடமளிக்கமாட்டோம்.” – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“இலங்கைத் தமிழரசுக் கட் சியின் நிர்வாகிகள் தெரிவு தொடர்பில் இணக்க அடிப்படையில் எட்டப்பட்ட முடிவு களை பொதுச்சபை அங்கீகரிக்காதவிடத்து அல்லது அந்தத் தெரிவுகளில் குழப்பங்கள் நிலவுமிடத்து,தேர்தல் முறைமை மூலம் தெரிவுகளை நடத்துங்கள் என்றும், அன் றைய தினமே மாநாட்டையும் நடத்தி முடியுங்கள் என்றும் கடந்த செவ்வாய்க்கிழமை தன்னைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் (இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர்) சம்பந்தன் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles