தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கே, வெகுவிரைவில் மெகா கூட்டணி மலரும் – – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர். இவர்களில் கள்ளவர்கள் அற்றவர்களை நாம் இணைத்துக்கொள்வோம்.
இந்நாட்டில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு சஜித்துக்கே, சிங்கள கட்சிகளும் உள்ளன. எனவே, இவை அனைத்தும் இணைந்து பலமான அணி உருவாகும்.
நாட்டில் இன்னும் மூன்று பூரணை (போயா) தினங்கள் முடிந்த பின்னர் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதியாக இருப்பார், இது உறுதி.” – என்றார்.
