தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து

வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் பெரும்பாலான மாணவர்கள் சிறந்த பெறும்பேற்றுகளை பெற்றுள்ளனர். மலையகத்தை சேர்ந்த  பெரும்பாலான பாடசாலைகளில் சிறந்த பெறுபேற்றை மாணவர்கள் பெற்றுள்ளனர். கொவிட் பெருந்தொற்றுக்கு மத்தியில் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ள மாணவர்களுக்கும், இப்பரீட்சையில் ஆர்வத்துடன் தோற்றிய மாணவ்ர்களுக்கும் இ.தொ.காவின் உபதலைவரும்,பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான்  வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு முழுவதும் கொவிட் பெருந்தாற்றால் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. பெரும் நெருக்கடிக்கு மத்தியில்தான் மாணவர்கள் கல்வியை கற்றனர். அவர்களுக்கு கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொண்டிருந்த ஆசிரியர்களும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர்.

பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியும்  மாணவர் சமூகம் இம்முறை சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளமைக்காக எனது பாராட்டை தெரிவிப்பதுடன்,  ஆசிரியர் சமூகத்துக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் இப்பரீட்சியில் தோற்று வெற்றிப் பெறாத மாணவர்களுக்கு இது முடிவல்ல ஆரம்பம் எனவே இனிமேல் எதிர்க்கொள்ளும் ஏனைய பரீட்சைகளை சிறப்பாக எதிர்க்கொள்ள வேண்டும் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles