தலவாக்கலை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளரின் வீட்டிலிருந்து 24 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை கிரேட் வெஸ்டன் தோட்டத்திலுள்ள முகாமையாளரின் வீட்டில், அதிக விலைக்கு மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுகின்றது என முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.
