தலைதூக்கும் கொரோனா – மீண்டும் ஒத்திவைக்கப்படுமா ஒலிம்பிக் போட்டிகள்?

ஜப்பானில் இவ்வாண்டு இடம்பெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் குறித்து மீண்டும் கேள்வி எழுந்துள்ளது.

தற்போது ஜப்பானில் COVID-19 நோய்ப்பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாகத் தோக்கியோ அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே, திட்டமிட்டபடி போட்டிகளை நடத்துவது மிகவும் சிரமம் என்று தோக்கியோ மருத்துவச் சங்கம் எச்சரித்துள்ளது.

உலக நாடுகள் சிலவற்றிலும் நோய்ப்பரவல் அதிகரித்திருப்பது மேலும் கவலையைக் கூட்டியுள்ளது.

நோய்ப்பரவல் தீவிரமானால் பார்வையாளர்கள் இல்லாமல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதும் சிரமம் என்று சங்கம் தெரிவித்துள்ளது.

போட்டிகள் தொடங்க இன்னும் 100 நாள்கள் உள்ள நிலையில் தோக்கியோ மருத்துவச் சங்கம் அவ்வாறு கூறியுள்ளது.

இருப்பினும் போட்டியை வெற்றிகரமாக நடத்த ஏற்பாட்டுக்குழு நம்பிக்கைக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தோக்கியோவில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் COVID-19 நோய்ப்பரவல் காரணமாக இவ்வாண்டு ஜூலை 23 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

Related Articles

Latest Articles