நுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் மறுபுறத்தில் தேர்தல் வன்முறைச்சம்பவங்களும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபுவின் வாகனங்கள்மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் கோடரி சின்னத்தின் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளரான அனுசா சந்திரசேகரனின் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தப்பட்டுவந்த வாகனங்கள்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அகரப்பத்தனை பொலிஸ் நிலையம், நுவரெலிய மாவட்ட பொலிஸ் காரியாலயம், தேர்தல் ஆணையகம் ஆகியவற்றில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையக மகக்ள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணனின் அடியாட்களே இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளனர் என அனுசா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.