தலையில் விறைப்பு ஏற்பட்டு மயங்கிய சிறுமி உயிரிழப்பு – யாழில் சோகம்

தலையில் விறைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்த சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

தண்ணீர் தாங்கி வீதி, குருநகரை சேர்ந்த ஜேசுதாஸ் அனோஜினி (வயது-10) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சென் ஜேம்ஸ் மகளிர் கல்லூரியில் 5ம் ஆண்டில் கல்வி கற்று வரும் குறித்த சிறுமி வீட்டில் இருந்த போது கடந்த 21ம் திகதி காலை 5 மணியளவில் தலையில் விறைப்பு ஏற்பட்டதையடுத்து மயங்கியுள்ளார்.

இதையடுத்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (29) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த இறப்பு தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். இதையடுத்து பிரதேச பரிசோதனைக்கு பின்னர் சடலவம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles