தான் வெளியிட்ட கருத்து தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்துவரும் நபர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை பதிலடி கொடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் என்பவற்றை இரு வருடங்களுக்கு ஒத்திவைக்குமாறு ரங்கே பண்டார கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.