தென்னிலங்கையிலுள்ள அரசியல் கட்சியொன்றுக்கு வடக்கில் கிடைக்கப்பெற்றுள்ள வெற்றியானது விசேட அம்சமாகும் என்று பொதுத்தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் வெற்றிபெற்ற தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கிய ஆணையை மதிக்கின்றோம். குறிப்பாக வடக்கிலும் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்றுள்ள ஆணைமூலம் இனவாதம் மற்றும் சந்தர்ப்பவாத அரசியலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
எனவே, கட்சிகள் மற்றும் குழுக்களின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கி பயணிப்பதற்குரிய தெளிவான ஆணை தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இப்படியானதொரு ஆணை எந்தவொரு கட்சிக்கும் கிடைக்கப்பெறவில்லை.
நாட்டில் ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் ஒழுக்கம் உள்ளிட்ட விடயங்களில் தேசிய மக்கள் சக்தி சிறப்பாக உள்ளது. அடுத்து தேசிய மக்கள் சக்தி எவ்வாறு செயற்படுகின்றது என்பதை ஆராய வேண்டும்.
அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும். தவறான வழியில் சென்றால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.” – என்றார்.