திம்புள்ள, பத்தனயில் இரு வீடுகளில் கொள்ளை

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு வீடுகளில் (03) அதிகாலை வேளையில் வீடுகளில் நுழைந்து மொத்தமாக 2பவுண் தங்க நகை மற்றும் 55, 850 ரூபா பணம் என்பன திருடிச் செல்லப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இரு வீடுகளிலும் உரிமையாளர்கள் உறக்கத்தில் இருந்த போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு உள் நுழைந்தவர்களால் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளும் பணமும் திருடப்பட்டுள்ளதாகவும் காலை எழுந்து தமது கடமைகளை செய்து கொண்டு இருந்ததாகவும் பின்னர் அலுமாரியை திறந்து இருந்ததை பார்த்தே திருட்டு இடம்பெற்றது தெரியவந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸாரும் , நுவரெலியா தடயவியல் பிரிவு பொலிஸாரும் மோப்ப நாயுடன் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Latest Articles