தமிழ் முற்போக்குக் கூட்டணியை ஏற்றுக்கொண்ட அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதில், கூட்டணியின் பங்காளிக் கட்சியான தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் திலகராஜ் ஒரு தடையில்லை என, மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் ஏ.லோறன்ஸ் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உயர்பீடத்தில், பெண் உறுப்பினர் ஒருவர் இடம்பெறவில்லை என்பதால், 2015ஆம் ஆண்டு கூட்டணியை அரசியற் கட்சியாகப் பதிவு செய்ய முடியவில்லை எனவும் கூறினார்.
மேலும், 2 கட்சிகளின் கூட்டணி என்கிற அங்கீகாரமே பதிவு செய்யப்படும்போது அவதானிக்கப்படுமெனவும், கூட்டணிக் கட்சிகளுக்குள் உள்ள உட்கட்சிப்பூசல்கள் இதன்போது கருத்திற்கொள்ளப்படாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.